வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்சவம்: விசேட கலந்துரையாடல்!

வன்னி செய்தியாளர்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில், இம்முறை பங்குனித் திங்கள் உற்சவத்தில் மக்கள் ஒன்று கூடும் நிலையை தடுக்கும் முகமாவும் இது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும்,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் நிர்வாகத்தினருக்கும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், இன்று (19-3-2020) காலை நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத்தில் மேலதிகச் செயலாளர் க.கனகேஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் தலைவர் முருகேசு குகதாசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.