ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்தவரால் ஏற்பட்ட கோரவிபத்து!

இலங்கை

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும் அதனை மதிக்காத ஒருசிலரால் அவ்வப்போது அசம்பாவிதங்களும் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

அந்தவகையில் கல்முனை திருகோணமலை பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த அரசவாகனம் ஒன்றுடன் உள்வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

ஊரடங்கு உத்தரவின்போது உள் வீதியால் வந்த குறித்த மோட்டார் வண்டி பாதையின் குறுக்காக எதிர் திசைக்கு சென்ற பொழுது வாகனம் மீது மோதியுள்ளது.

எனினும் சாரதியின் சமயோசித முயற்சியினால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டபோதும் அரசவாகனம் வாகனம் பாரிய சேதமடைதுள்ளது.

திருகோணமலையில் இருந்து சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட ஒரு அவசர கூட்டத்திற்கு சென்றபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.