முல்லைத்தீவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு

மாந்தைகிழக்கு பிரதேசத்தில் தினக்கூலி வருமானம் மூலம் வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்லும் 55 வரையான குடும்பங்களுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்லத்தினால் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு சட்டம் காரணமாக வருமானத்தை இழந்த தினக்கூலி செய்யும் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர்பிரிவிற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பூவசரங்குளம், பொன்னகர், கரும்புள்ளியான் வடகாடு, பாலைப்பாணி, பாண்டியன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் சுமார் 55 வரையான குடும்பங்களுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவனருள் இல்லத்தினால் பாண்டியன்குளம் சிவயோக சுவாமிகள் அறநெறிப்பாடாசலை ஊடாக உலருணப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் தினக்கூலியை நம்பிய குடும்பங்கள் என 55 குடும்பங்களுக்கு குறித்த உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.