இலங்கையில் கர்ப்பிணி பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் – குழந்தைக்கும் மருத்துவ சோதனை!

இலங்கையின்

பேருவளையில் குழந்தை பிரசவித்த பெண்ணொருவருக்க கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகொட வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றியதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பேருவளை, பன்னில பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக அந்த பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் சிலர் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது தனது பிரதேசம் உட்பட விடயங்களை மறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வைத்தியசாலை வைத்தியர் உட்பட ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் பிரசவித்த குழந்தைக்கு கொரோனா தொற்றியுள்ளதா என்பது தொடர்பில் பரிசேதனை நடவடிக்கைகள் மேற்கொள்வதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.