யாழ் மாவட்டத்தில் வீதிக்கு வந்தால் உடன் கைது! அனைவரும் அவதானம்!

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட ஒழுங்கைகளில் பாஸ் இல்லாமல் நடமாடும் அனைவரையும் பரவலாக பொலிஸார் கைது செய்கின்றனர்.

எனவே யாரும் நடமாடுவது சிறந்ததல்ல என கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றாத அனைவரும் கைது செய்யப்பட்டு பிணை இன்றி சிறையில் அடைக்கப் படுவர் என கூறப்படுகிறது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் நடமாடிய 40 பேர் யாழ்ப்பாண போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பல பாகங்களுக்கு இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தும் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடதக்கது.

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .