இலங்கையில் சற்றுமுன்னர் 7ஆவது கொரோனா மரணம் பதிவானது!

இலங்கை

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது..

ஐ.டி.எச் இல் சிகிச்சைப் பெற்றுவந்த 48 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

களுத்துறை மாவட்ட மக்கொன பகுதியை சேர்ந்த இவர் ஜேர்மன் சென்று திரும்பியிருந்தாரென தெரியவந்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.