இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!

கொவிட் -19

ஸ்ரீலங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது இன்று மட்டும் மூன்று பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று (08) அடையாளம் காணப்பட்ட 03 கொவிட் -19 நோயாளிகளும், ஏற்கனவே இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் கண்ட நோயாளியுடன் தொடர்புடையோர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் கொவிட் -19 வைரஸ் தொடர்பாக இன்று அடையாளம் காணப்பட்ட மூன்று பேரும் இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 தொற்றினால் நாட்டில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 42 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன் 140பேர் சிகிச்சைபெற்றுவருவதோடு 273 பேர் வைத்தியகண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.