ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி!

ஊரடங்குச் சட்டம்

கொவிட் -19 அபாய வலயங்களாக குறிப்பிடப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படவுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களில், எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.