அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்கள்- 05.13.2020.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவித்தல்

2020 ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இன்றைய தினம் (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சரவைப் பேச்சாளர்களான கௌரவ உயர்கல்வி, தொழில் நுட்பம், புத்தாக்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் கௌரவ பெருந்தோட்டத்துறை, ஏற்றுமதி விவசாயத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சுருக்கம் பின்வருமாறு:

• இலங்கையில் கொவிட் 19 தொற்று பரவுவதை தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் விரிவான தகவல்கள் அடங்கிய 3 நூல்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டன. கொவிட் 19 நோய்த் தொற்றை தடுக்கும் இலங்கையின் நடைமுறை தொடர்பான நூல் ஒன்றும் , இந்த தொற்று நோயினால் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தும் நூல் ஒன்றும் இதனுடன் தொடர்புபட்ட ஆங்கில மொழியில் நூல் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக இறக்குமதியை வரையறுப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு

இதன் கீழ் ஆடம்பரப் பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்படுவதுடன், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு வரையறை விதிக்கப்படமாட்டாது.

அத்தியாவசியமல்லாத இருப்பினும் ஆடம்பரப் பொருட்கள் தொகுதிக்குட்படாத நிர்மாணப்பணிகளுக்குத் தேவையான பொருட்கள் முதலானவற்றை இறக்குமதி செய்யும் பொழுது 180 நாட்களுக்குப் பின்னர் பணத்தை செலுத்துவதற்கான உடன்பாட்டின் அடிப்படையில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியுமாயின் மாத்திரம் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும்.

இதனுடன் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் தொழிற்துறையினருக்கும் ஏதேனும் பிரச்சினையிருக்குமாயின் அது தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு அறிவிக்க முடியும்.

• கௌரவ வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் திறனாற்றல்கள் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் தற்போதைய நிலைமையின் கீழ் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை திறக்கமுடியாத சந்தர்ப்பங்களில் அவற்றின் ஊழியர்களுக்கு தொழிலை உறுதிசெய்வதற்காக தனியார் தொழிற்துறையினர் மற்றும் தொழில் சங்கம் போன்ற இருத்தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி கீழ்க்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டதாக அமைச்சரவைக்கு அறிவித்தார்.

தற்போதைய கொரோனா தொற்றின் காரணமாக எந்தவொரு ஊழியரும் வேலையிலிருந்து நீக்கப்படமாட்டார்கள். நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் ஊழியர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட சம்பளத்தில் அரைப்பங்கு அல்லது ரூபா 14,500 என்ற இரண்டில் கூடுதலான தொகையை செலுத்துதல்.

• கௌரவ சுகாதார , போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி அவர்களினால் கொவிட் 19 தொற்று நிலைமையினால் வருமானத்தை இழந்தவர்களுக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளுக்கும் சிறுநீரக நோயாளர்களுக்குமான கொடுப்பனவு, முதியோர் முதலானவர்களுக்காக வழங்கப்பட்ட 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை மே மாதத்திலும் வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பித்தார்.

இதன் கீழ் 51,44046 பேருக்காக 25,72024 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

• கௌரவ மகாவலி , விவசாயம் , நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைவாக தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள விவசாய மேம்பாட்டின் காரணமாக சிறுபோகத்தில் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் காணியின் அளவு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், இதனை தீர்ப்பதற்காக தற்பொழுது உடனடி கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை உர நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உர நிறுவனத்தின் மூலம் உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட வுசipடந ளுரிநசிhழளிhயவந இற்காக மாற்றீடாக ஏப்பாவல பொஸ்பேட் அகல்வு மூலம் தற்பொழுது தயாரிக்கப்படும் சுழஉம phழளிhயவந இற்கு பதிலாக ளுiபெடந ளரிநசிhழளிhயவந ஐ உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.

• கௌரவ நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக விளக்கமறியலில்; உள்ள கைதிகளின் தொழில் பாதுகாப்பிற்காக சிறைச்சாலை திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் குறுகிய மற்றும் நீண்டகால தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

• தொழில் கற்கைநெறிகளுக்கான சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் தொழில் பயிற்சி கற்கைநெறிகளை வெற்றிகரமாக மேற்கொள்ளும் கைதிகளுக்கு தனியார் நிறுவனங்களின் மூலம் அவசியம் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல்.

• கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக அறுவக்காரு கழிவுப்பொருள் பிரிவில் , கழிவுப் பொருட்களைக் கொட்டும் திட்டம் மற்றும் அதற்கான பணிகள் இந்த திட்டக் காலப்பகுதியில் முடிவடையும் வரையில் தொடர்ந்தும் மேற்கொள்ளுதல்.

இதில் திண்மக் கழிவுப் பொருட்கள் அதாவது கட்டிட கழிவுப் பொருள் மற்றும் எரிசக்தி உற்பத்தி மூலம் ஏற்படும் சாம்பலை வைப்பதற்கு இந்த பிரிவை பயன்படுத்துவதற்கும் இதுவரையில் கொட்டப்பட்டுள்ள கழிவுப் பொருட்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் அடர்த்தியான கழிவுநீரை சுத்திகரிக்கும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

• கௌரவ சமூக ஊக்குவிப்பு மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக பெருந்தோட்டத்துறையில் குறைந்த வருமானத்தைக் கொண்ட பயனாளிகளுக்காக புதிய வாழ்க்கை வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் கடன்தொகை 10 இலட்சம் ரூபாவிலிருந்து 15 இலட்சம் ரூபாவரை அதிகரிக்கப்படுகின்றது.

இந்த கடன் தொகையில் 52 சதவீதம் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரினால் செலுத்தப்படுவதுடன் இது 4 சத வட்டிக்கும் 20 வருட காலப்பகுதியில் மீள செலுத்தும் காலத்திற்கும் உட்பட்டதாகும்.