வைகாசி மாத ராசிபலன் 2020 : புகழ், செல்வாக்கு, அந்தஸ்தை பெற போகும் அதிர்ஷ்டக்கார ராசி எது?

வைகாசி மாத ராசிபலன் 2020

சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதம்.

இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரைக்கும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

முக்கிய பிரமுகர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். நயமான பேச்சால் உங்கள் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். நீண்ட நாளாக வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவுகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் வரும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அண்டை, அயலார் உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழியில் ஆதரவு உண்டு. தாய் மற்றும் உறவுகளால் நன்மை உண்டாகும்.

அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் உங்கள் சொல்லுக்கு மதிப்பளிப்பார்கள்.

உங்கள் அறிவுத்திறனை பயன்படுத்தும் சூழல் உருவாகும். பொழுது போக்குகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வெளியில் சென்று வந்தால் கை கழுவுவதை மறக்க வேண்டாம். வெளியில் செல்லும் போது மாஸ்க்கை தவறாமல் பயன்படுத்தவும்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வரவாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தம்பதியர் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 31, ஜூன் 1,2,9,10,11,12,13.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 4,5,6

பரிகாரம்: சாய்பாபாவிற்கு வியாழக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்

சமூகத்தின் பால் அதிக அக்கறை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதும், குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதும் நல்ல யோகமான அமைப்பாகும். உங்கள் சிந்தனையில் ஒரு தெளிவு பிறக்கும்.

தோல்விகளில் இருந்து பாடங்களை கற்று கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்னைகளையும் எளிதில் கையாண்டு நிரந்தர தீர்வு காண்பீர்கள். தடைபட்ட காரியங்கள் இனிதே நிறைவேறும்.

விலகி சென்ற உறவுகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். வீண் வாக்கு வாதங்களை தவிர்த்தால், உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உண்டு. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. மற்றவர்களின் தொடர்பில் கவனமாக இருப்பது நல்லது. தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அதிக சிந்தனை செய்வீர்கள். அதற்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். சிறு, சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.

உங்கள் வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் எல்லாம் விலகும். புதிய சிந்தனைகள் மனதில் உதயமாகும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும். உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 14,15,16,17,18,19. ஜூன் 2,3,4,11,12,13,14.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 6,7,8.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

மிதுனம்

மற்றவர்களுடனான நட்பை பாராட்டுவதில் அதிக அக்கறை கொண்ட மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் சிக்கனம் தேவை. வீண் செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். கடன் வாங்கும் சூழல், வட்டிக்கு பணம் வாங்கும் சூழல் ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களில் கருத்து வெளியிடுவதை தவிர்க்கவும்.

மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ளுங்கள். சகோதர வகையில் மனகசப்புகள் வரவாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மாத முற்பகுதியில் சில பிரச்னைகள் இருந்தாலும், மாத பிற்பகுதியில் அனைத்தும் சுமுகமாக முடியும்.

தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் மனகசப்புகள் இருந்தாலும், மாத பிற்பகுதியில் நலம் விளையும். அவசியமற்று வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி இருந்தாலும், அவர்களுக்கு செலவீனங்கள் அதிகரிக்கும்.

குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையை செய்வது நன்மை தரும். எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். அண்டை அயலாருடன் வீண் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

வெளி ஆட்களை குடும்ப பிரச்னைகளில் தலையிடாமல் பார்த்து கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும் சமாதான வழிமுறையை கையாளுங்கள்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனமாக செயல்படுங்கள்.

தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்களால் சிறு பிரச்னைகள் இருந்தாலும், அவர்களால் ஆதாயம் உண்டு. மாத பிற்பகுதியில் நேர்மறையாக சூழல் மாறும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 17,18,19, 20,21. ஜூன் 4,5,6,13,14.

சந்திராஷ்டம நாட்கள்: மே 14, ஜூன் 9,10,11.

பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மருக்கு சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

கடகம்

பொதுநலனில் அதிக ஈடுபாடு கொண்டு, மற்றவர்களுக்கு உதவிகள் புரியும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சந்திர பகவான் உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் மனதில் தெளிவு பிறக்கும்.

எதிரிகளால் இருந்த பிரச்னைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உங்கள் ஆளுமைத்திறன் அதிகரிக்கும்.

எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் உருவாகும். உங்கள் பேச்சுத்திறமை வெளிப்படும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாளாக வரவேண்டிய பணம் கை வந்து சேரும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் மாத பிற்பகுதியில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.

தாயின் அன்பும், ஆதரவும் உண்டு. உறவினர்கள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வீர்கள். யோகா, தியானம் என மனம் லயிக்கும். குழந்தைகள் உடல் நலனில் அதிக கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்லுங்கள்.

கணவன் மனைவிக்குள் சிறு, சிறு மனகசப்புகள் இருந்தாலும், புரிந்துணர்வு ஏற்பட்டு, நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற இழப்புகள் மற்றும் வீண் விரயங்கள் ஏற்படும்.

தந்தையால் அனுகூலம் உண்டு. மூத்தோர்களின் நல்லாசி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.நண்பர்களால் ஆதாயம் உண்டு.

உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான திட்டங்களை யோசிப்பீர்கள். நம்பிக்கையுடன் எதையும் எதிர்கொண்டு முன்னேறுவீர்கள். உங்கள் பொறுமையும், தன்னம்பிக்கையும் உங்களை வழிநடத்தும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே19,20,21,22,23,24. ஜூன் 6,7,8.

சந்திராஷ்டம நாட்கள்: மே 14,15,16. ஜூன் 11,12,13.

பரிகாரம்: ஸ்ரீ ராம பிரானுக்கு திங்கள் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

சிம்மம்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மாறாத சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். புகழ், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். உங்கள் செயல்களில் திட்டமிட்டு உழைத்து வெற்றி பெறுவீர்கள்.

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்களை சார்ந்தவர்கள் உங்களின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ப இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டு.

சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். புதிய திட்டங்கள் மற்றும் யுக்திகளால் ஆதாயம் பெறுவீர்கள்.

தாயின் அன்பு அதிகரிக்கும். உறவுகள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழந்தைகள் உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனையையும், வழி காட்டுதலையும் கொடுப்பது நன்மை பயக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் வந்து நீங்கும். பெரிதாக கவலைப்பட தேவையில்லை.

கணவன் மனைவிக்குள் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் வந்தாலும், அதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படுமே ஒழிய பிரச்னை இல்லை. எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டு. தந்தை வழியில் அனுகூலம் உண்டு. பெரியோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் சூழ்நிலைக்கேற்ப சில மாற்றங்களை செய்து முன்னேறுவீர்கள். உங்கள் திறனுக்கேற்ற புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். முக்கிய நபர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 14, 22,23,24,25,26. ஜூன் 9,10,11.

சந்திராஷ்டம நாட்கள்: மே 17,18,19. ஜூன் 13,14.

பரிகாரம்: ஸ்ரீ சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

கன்னி

கடினமான சூழ்நிலையையும் இலகுவாக மாற்ற கூடிய தந்திரம் தெரிந்த கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 9ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் ஒரு தெளிவு பிறக்கும்.

மூத்தோர்களின் ஆசியும், வழிகாட்டுதலும் கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சகோதர, சகோதரிகளிடையே மன கசப்புகள் வந்து நீங்கும். அவசியமற்று வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. சுற்றத்தாரிடம் அனுசரித்து செல்லுங்கள்.

தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளிடையே சிறு மனகசப்புகள் வந்து நீங்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உருவாகும்.

குழந்தைகளின் செயல்கள் உங்களை பெருமைப்பட வைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு.

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்கள் உருவாகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார். மூத்தோர்களின் வழிகாட்டுதலும், உதவியும் கிடைக்கும். தெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும்.

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். உயரதிகாரிகள் உங்களுக்கு சில சூட்சமங்களை சொல்லித் தருவார்கள்.

சக ஊழியர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய நபர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்கசிக்கனமாக செலவழிக்க தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 14,15,16, 24,25,26, 27,28,29. ஜூன் 11,12,13.

சந்திராஷ்டம நாட்கள்: மே 19,20,21.

பரிகாரம்: ஸ்ரீ கண்ணபிரானுக்கு புதன் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

துலாம்

எல்லோரும் சமம் என்ற எண்ணத்தில் உறுதி கொண்ட துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான், உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால், சிறு சிறு தடைகள், பிரச்னைகள் இருந்தாலும், எதிர்பாராத அதிர்ஷ்டமும், தனவரவும் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வீண் வாக்கு வாதங்களையும், தேவையற்ற பிரச்னைகளையும் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு.

அண்டை, அயலார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம்.

செலுத்துவது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் செயல்களால் பெருமை படக்கூடிய சூழல் உருவாகும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையால் அனுகூலம் உண்டாகும். வீடு, வாகன விஷயங்களில் வில்லங்கம் உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களால் லாபம் உண்டு.

தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். மூத்தோரின் சொல் கேட்டு அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். நண்பர்களிடையே கவனம் தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 17,18,19, 27,28,29,30,31. ஜூன் 13,14.

சந்திராஷ்டம நாட்கள்: மே 22,23,24.

பரிகாரம்: ஸ்ரீகால பைரவருக்கு வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்

எதிலும் நன்மை, தீமைகளை பகுத்தறிந்து செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 4ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்வதற்கான சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை.

வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும். சகோதர, சகோதரரிகளால் ஆதாயம் உண்டு. மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அண்டை, அயலார் உதவியாக இருப்பார்கள்.

தாய் வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவீர்கள். யோகா, தியானம் என மனம் லயிக்கும். தடைகளை தாண்டி முயற்சித்து முன்னேறுவீர்கள்.

சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது.

குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்த்து அனுகூலமான பலன்களை பெறலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வாடகை தொடர்பான பிரச்னை உருவாகும். எதிரிகளிடம் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் கூட ஒன்றிணைவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் உண்டு.

புதிய ஒப்பந்தங்களால் நன்மை உண்டு. மற்றவர்களின் தொடர்பில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்னைகளை தவிர்ப்பது நல்லது. தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் நன்மை உண்டாகும். உயரதிகாரிகளிடம் உங்களுக்குஅங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 19,20,21, 29,30,31. ஜூன் 1,2.

சந்திராஷ்டம நாட்கள்: மே 24,25,26.

பரிகாரம்: ஸ்ரீ முருகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்

தனுசு

மக்கள் சேவையே, மகேசன் சேவை எனும் கொள்கை உடைய தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 2ல் சனி பகவானுடன் நீச பங்க ராஜயோகம் பெற்று இருப்பது மிகச் சிறந்த அமைப்பு ஆகும். இதுவரை இருந்த தேவையற்ற பிரச்னை, மன அழுத்தம் குறையும்.

புதிய சிந்தனைகள் மனதில் துளிரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் தவறுகளை உணர்ந்து திருத்தி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மேம்படும். தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். ஒருவர்க்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள்.

உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சகோதர, சகோதரிகளால் தேவையற்ற பிரச்னைகளும், விரயமும் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

வீண் விவகாரங்களை இந்த கால கட்டத்தில் தவிர்க்கவும். அண்டை, அயலாரை அனுசரித்து செல்வது நல்லது. தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டு.

வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் வந்து நீங்கும். தாய் மற்றும் உறவுகளுடன் இருந்த மன கசப்புகள் சிறிது, சிறிதாக குறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி பொங்கும். எனினும் குழந்தைகள் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

குழந்தைகளின் வருங்காலத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிரிகளிடம் கவனம் தேவை. அரசு தொடர்பான வீண், வம்பு வழக்குகள் வர வாயப்புள்ளதால் அரசு அறிவுரை கேட்டு நடப்பது நல்லது.

கணவன் மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், புரிந்துணர்வு ஏற்படும் என்பதால் கவலை தேவையில்லை. எதிர்பாராததன வரவுஉண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 22,23,24, 31. ஜூன் 1,2,3,4.

சந்திராஷ்டம நாட்கள்: மே27,28,29.

பரிகாரம்: ஸ்ரீ குருபகவானுக்கு வியாழக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

மகரம்

கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்ட மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் உங்கள் ராசியிலே இருப்பது நன்மையென்றாலும், இது ஏழரை சனியின் ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள்.

தற்போது குரு பகவானும் ஜென்ம குருவாக உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் தேவையற்ற கோபம் மற்றும் குழப்பங்களை தவிர்த்து விழிப்புடன் செயல்படுங்கள்.

எதிலும் பொறுமை, நிதானம் தேவை. எந்த விஷயத்தையும் செயல்படுத்துவதற்கு முன், ஒன்றுக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.

சகோதர, சகோதரிகளிடையே இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்களை யோசிப்பீர்கள்.

அயலார் உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். வீடு, வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் செயல்களால் பெருமை படக்கூடிய சூழல் உருவாகும். பூர்வ புண்ணிய பலம் உங்களை காக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிரிகளால் பிரச்னை வர வாய்ப்புள்ளதால் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தொழில், உத்தியோகத்தில் ஏற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கிய ஆலோசனை தருவார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு வழியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 24,25,26. ஜூன் 2,3,4,5,6.

சந்திராஷ்டம நாட்கள்: மே 29,30,31.

பரிகாரம்: ஸ்ரீ மத் ராமானுஜருக்கு சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

கும்பம்

மற்றவர்களுக்கு உதவுவதில் அலாதி பிரியம் கொண்ட கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும்.

சமூக சேவையில் ஆர்வம் செல்லும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை தேடிச் சென்று செய்வீர்கள். சேமிப்பு குறைந்து செலவீனங்கள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் அதிக கவனம் தேவை.

பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு உண்டாகும். மற்றவர்களின் உதவியை நாடும் சூழலும், கடன் வாங்கும் சூழலும் உருவாகும். பேச்சில் கவனம் தேவை. வீண் பேச்சில் நேர விரயத்தை தவிர்க்கவும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. அவர்கள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தாய் வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எனினும் குழந்தைகள் உடல் நலனில் அதிக அக்கறை தேவை.

தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையால் தேவையற்ற வீண் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் தன வரவு உண்டு. எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வாய்ப்புள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்படுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.தந்தையால் அனுகூலம் உண்டு.

தந்தை உங்களின் வாழ்வின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை உயரதிகாரிகளால் பாராட்டப்படும். நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே27,28,29. ஜூன் 4,5,6,7,8.

சந்திராஷ்டம நாட்கள்: மே 31, ஜூன் 1, 2.

பரிகாரம்: ஸ்ரீ சனீஸ்வர பகவானை சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.

மீனம்

எந்த சூழ்நிலையிலும் தன்னையும் உற்சாகமாக வைத்து கொண்டு, மற்றவர்களையும் உற்சாகப் படுத்தும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ல் சனி பகவானுடன் நீச பங்க ராஜயோகம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் யோகமான காலமாகும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாழ்வில் நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படும்.

குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் சிக்கனம் தேவை. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும்.

திட்டவட்டமாக முடிவுகள் எடுத்து செயல்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் உடல் நலனில் கவனம் தேவை.

தாய் மற்றும் உறவுகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அரசு தொடர்பான ஆணைகளை அனுசரித்து செல்லுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் செயல்கள் மற்றவர்களால் பாராட்டப்படும்.

வருங்காலத்திற்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எதிரிகளால் தவறான தகவல்கள் பரப்பப்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு.

புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. தந்தை உடல் நிலையில் கவனம் தேவை. தந்தையுடன் சிறு மனகசப்புகள் வந்து நீங்கும்.தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமை உயரதிகாரிகளால் பாராட்டப்படும்.

சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெரியோர் மற்றும் மூத்தோர்களின் ஆசீர்வாதம் உண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: மே 14,29,30,31. ஜூன் 6,7,8,9,10,11.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 2,3,4.

பரிகாரம்: சிவ பெருமானை வியாழக் கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.