உன்னை அதிகம் நேசிக்கிறேன்! திருமண நாளில் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரீலங்கா அணி வீரர்!

தில்ஷன் முனவீர

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி வீரர் தில்ஷன் முனவீர தனது திருமண நாளை நேற்று கொண்டாடிய நிலையில் மனைவியுடன் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சர்வதேச கிரிக்கெட் அணி வீரர் தில்ஷன் முனவீர இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், பதின்மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

மேலும் 83 முதல் தர போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். முனவீரவுக்கும், சஞ்சீவனி பலிஹகாரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2016ல் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு நேற்று நான்காம் ஆண்டு திருமணநாள் ஆகும்.

இதையடுத்து டுவிட்டரில் மனைவியுடன் இருக்கும் புகைப்படஙளை முனவீர வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், என் அன்பான மனைவிக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், உன்னை அதிகமாக நேசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.