கிழக்கின் சில கரையோரப் பிரதேசங்களில் கிணறுகள் திடிரென வற்றியுள்ளதால் மக்கள் பதற்றம்

ஸ்ரீலங்காவில்

மட்டக்களப்பு கல்முனை கோட்டைக்கல்லாறு, அம்பாறை மாவட்டத்திலும் சில பகுதி ஆகிய கடலுடன் அன்டிய பகுதிகளில் உள்ள சில கிணறுகள் வற்றிய நிலையிலும் நீர் மட்டம் குறைந்த நிலையிலும் காணப்படுகின்றது.

இன் நிலையானது தற்போது கடலில் ஏற்பட்டுள்ள அமுக்கமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனைப் பிராந்திய கரையோரத்தில் சில கிணறுகள் திடிரென வற்றியுள்ளன. மக்கள் பதட்டத்திலுள்ளனர்.

உண்மை என்னவென்பது தெரியாத சூழலில் மக்கள் உள்ளனர். சிலர் இடம்பெயர்ந்துமுள்ளனர்.

தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்க வலயமானது (Low pressure area) இன்று (16.05.2020) காலை வலுவான தழமாக மாறி (Deep Depression) வலுவடைந்து நாளை இரவு சூறாவளியாக (Cyclone) வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சூறாவளியாக உருமாறும் சந்தர்ப்பத்தில் இதற்காக தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட உண்பான் (Amphan) எனும் பெயர் சூட்டப்பட உள்ளது.