ஸ்ரீலங்காவில் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் -19 நோயாளிகளின் விபரம் வெளியானது!

கொவிட் -19 வைரஸ்

ஸ்ரீலங்காவில் மேலும் பத்து கொவிட் -19 நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (15-5-20) மாத்திரம் பத்து நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்ட பத்து நோயாளிகளில் ஒன்பது பேர் கடற்படை சிப்பாய்களாகும். மற்றைய நபர் கடற்படை சிப்பாய்களுடன் நெருங்கி செயற்பட்டவர் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதுவரையில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான 447 பேர் குணமடைந்துள்ளனர். 449 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.