இன்றைய ராசிபலன்: 17.05.2020: சித்திரை மாதம் 4ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன்

இன்று சார்வரி வருடம், வைகாசி மாதம் 4ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி, 17.5.2020 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை, தசமி திதி பகல் 3:15 வரை, அதன்பின் ஏகாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 4:20 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம் • சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம் • பொது: சூரியபகவான் வழிபாடு.

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்: முன்கோபத்தால் சில பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. கூடுதல் முயற்சியால் நிதி நிலை மேம்படும். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் சிறந்த வெற்றிகளை அடைவீர்கள். மேலதிகாரிகள் முக்கிய விவகாரங்களில் பக்கபலமாக இருப்பார்கள்.

ரிஷபம்: வியாபாரிகள் அபரிமிதமான முதலீடுகளைச் செய்ய வேண்டாம். பெண்கள் அநாவசியமான செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். உறவினர், நண்பருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். காதல் வாழ்வில் பெரிய திருப்பம் எதுவும் நிகழ வாய்ப்பில்லை.

மிதுனம் : தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவததை தவிர்க்கவும். அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. பங்கு சந்தையில் இப்போதைக்கு முதலீடு செய்யாமல் இருப்பது நலம். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.

கடகம்: மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும், பாசமும் அதிகரிக்கும். நிதிப் பற்றாக் குறையைத் தவிர்க்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவது நல்லது. பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வில் அக்கறை கொள்வர்.

சிம்மம் : வெளிப்புற வேலைகளால் ஆதாயம் உண்டு. கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். வீட்டு உபயோகப் பொருளின் பழுதினால் பணம் லெவாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வீண்வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

கன்னி: நண்பர்களுடன் பழையகால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்குப் பொறுப்பு மிக்க வேலை அதிகமாகும். மிகவும் தயங்கியும் பயந்தும் செய்த விஷயங்கள் பாராட்டைப் பெறும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

துலாம்: வியாபாரத்தின் சூழ்நிலை நீங்கள் விரும்பியபடி இருப்பதால் சாதனை புரிவீர்கள். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வாகனம் அல்லது பூர்வ சொத்தை விற்பதால் கூடுதல் லாபம் இருக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினரிடையே சிறிய அளவில் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். புதுவீடு மாறும் சூழல் உருவாகும். மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது நல்லது. உத்யோகத்தில் சவாலன சூழ்நிலையை எதிர்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள்

தனுசு: அவசர வேலைகளை உடனே முடித்து விடுவது நல்லது. வீண்செலவுகளால் வியாபாரிகளுக்குக் கவலை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரியின் முழு ஆதரவு கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

மகரம்: பணியாளர்கள் அழுத்தமான சூழ்நிலையை எதிர் கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் இணையதளம் மூலமாக பலபுதிய விஷயங்களை கற்றுக்கொள்வர். பெண்களுக்கு சிறிய தடைக்கு பிறகே நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும். மனதில் உள்ளதை பிரியமானவர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சி காண்பீர்கள். பலநாள் தள்ளிப்போன வேலைகள் அனைத்தும் நல்லபடியாக முடியும். உடல்நலனில் கவனம் தேவை.

மீனம்: சகோதர, சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு பயணம் தள்ளிப் போவதால் நன்மை விளையும். மாணவர்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் கொள்வர்.