என்னை மன்னித்துவிடுங்கள் முதலாளி.. சைக்கிளை தூக்கிட்டு சொந்த ஊருக்கு பயணம்!

இந்தியாவின்

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராதா கிராமத்தில் பணியாற்றி வந்தவர் இக்பால். இவரது சொந்த மாநிலம் உத்திரபிரதேசம் மாநிலம் ஆகும். இவர் இராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கால் இங்கு இருப்பதற்கு பதிலாக, சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்று முடிவெடுத்து, சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கணம் சிந்தித்தார்.

இதனையடுத்து தான் பணியாற்றும் உரிமையாளரின் வீட்டில் இருக்கும் சைக்கிள் இவரது கண்களில் தென்படவே, சைக்கிளை கேட்டால் தருவார்களா? மாட்டார்களோ? என்ற எண்ணத்தில் சைக்கிளை திருடிவிட்டு கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார்.

இது குறித்த கடிதத்தில், சைக்கிளில் தான் 250 K.M தொலைவில் உள்ள சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்துளேன். உங்களிடம் சைக்கிளை கேட்டால் தருவீர்களா? என்று தெரியவில்லை. என்னை எப்படியாவது மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.