கனடாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் -19 தடுப்பு மருந்து நோயாளிகளிற்கு வழங்க ஒப்புதல்!

கொவிட் -19 தடுப்பு மருந்து

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள கொவிட் -19 தடுப்பு மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்க அந்நாட்டு அரசு ஒப்பதல் அளித்திருக்கிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள கொவிட் -19 தடுப்பு மருந்தை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அனுமதித்திருப்பதாக அறிவித்தார்.

டல்ஹவுசி பல்கலைக்கழக மருத்துவமனையில் இந்த மருந்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

“இந்த மருந்து வெற்றிகரமானதாக அமைந்தால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து விநியோகமும் செய்வோம்” எனவும் பிரதமர் ஜஸ்டின் கூறியிருக்கிறார்.

“ஆராய்ச்சியில் முன்னேற்றம் காண்பதற்கு நீண்ட காலம் ஆகும். அதைச் சரியாகச் செய்யவேண்டும். இருப்பினும், இப்போது வந்திருக்கும் செய்தி நம்பிக்கைக்குரியது.” என்று ட்ரூடோ குறிப்பிட்டார்.

சனிக்கிழமை வரை கனடாவில் 75,770 பேருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,677 பேர் உயிரிழந்துள்ளனர்.