தோழியை பிரிய மனமில்லாது ஒருசேர எடுத்த முடிவு.. ஊரே பெரும் சோகத்தில்.!!

தமிழகத்தின்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம் கொக்கிகளை எளியாம்பாளையம் பகுதியை சார்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவியின் பெயர் ஜோதி (வயது 23). இவர்கள் இருவருக்கும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கும் நிலையில், ஜோதியின் பெற்றோர் கடந்த 6 மாதமாக கேரளாவில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

ஜோதி தனது கணவரை பிரிந்து பெரியமனாலி பகுதியில் பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில், அங்குள்ள தறிப்பட்டறைக்கு சென்று வந்துள்ளார். இதே தறிப்பட்டறையில் கோட்டம்பாளையம் பகுதியை சார்ந்த பிரியா (வயது 20) என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். பிரியாவிற்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், ஜோதிக்கும் – பிர்யாவிற்கும் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இணைபிரியாத தோழிகளாக பழகி வந்த நிலையில், எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர். இந்நிலையில், பிரியாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து பெற்றோர்கள் வரன் பார்த்து, 27 ஆம் தேதி திருமனத்திற்கு நாள் குறித்துள்ளனர். இதற்கான பணிகளும் நடைபெற்று வந்துள்ளது.

இந்த சமயத்திற்கு உள்ளாகவே, திருமணம் முடிந்தால் தோழிகள் இருவரும் கட்டாயம் பிரிய வேண்டும் என்ற மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். மேலும், பிரியா தனது தாயிடம் தோழியை பார்த்துவிட்டு வருவதாக ஜோதியின் இல்லத்திற்கு வரவே, இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, ஒரேசேலையில் தூ க்கிட்டு தற்கொ லை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.