ஸ்ரீலங்காவில் கொவிட் -19 பரவல் தொற்றின் ஆபத்து நீங்க வில்லை! வைத்தியர் எச்சரிக்கை!

சுதத் சமரவீர

ஸ்ரீலங்காவில் கொவிட் -19 வைரஸ் பரவலின் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் இன்னமும் அவதானமாக செயற்பட வேண்டும் என தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களிலும் மக்கள் சுகாதார பாதுகாப்பு முறையை கடைபிடிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் நோய் சமூகத்தில் பரவுமா என ஆராய்வதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் உரிய பரிசோதனைகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.