இன்றைய ராசிபலன்: 18.05.2020: சித்திரை மாதம் 5ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன்

இன்று சார்வரி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 24ம் தேதி, 18.5.2020 திங்கட்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி மாலை 5:11 வரை, அதன்பின் துவாதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 6:53 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

• பரிகாரம் : தயிர் • சந்திராஷ்டமம் : மகம், பூரம் • பொது: முகூர்த்த நாள், ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ரிஷபம்: தாமதமான செயல்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும். மாணவர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் கொள்வர். வாகன வகையில் சிறிய செலவினங்கள் ஏற்படலாம். பெண்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். வருமானம் திருப்திகரமாகும்.

மிதுனம் : கணவன் மனைவி ஒற்றுமையில் சிறிய அளவிலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு தடைகள் ஏற்பட்ட பிறகே நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். திருமணம் பற்றிய முயற்சிகள் வெற்றி அடையும்.

கடகம்: பெண்களுக்கு குடும்பத்தினரின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்கள் முயற்சி செய்தால் தாய் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு உண்டு.

சிம்மம் : எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு ஆடை, நகைகளின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றத்தை பெறுவதற்கான சூழல் உருவாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி: அலுவலகப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மாணவர்கள் கவனக் குறைவினால் ஏமாற்றத்துக்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்.

துலாம்: கணவருக்கு வாழ்வில் மேன்மை உண்டு. கூடுதல் கவனத்துடன் பணிபுரிவது நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும்.

விருச்சிகம்: எதிர்பார்ப்பு கூடுவதால் ஏமாற்றங்களுக்கு உள்ளாக வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இறுதியில் சரியாகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

 

தனுசு: குடும்பத்தினரின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

 

மகரம்: உறவினர், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பெண்கள் எடுத்த சவால்களில் வெற்றி பெறுவர். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் மூலம் முக்கிய அறிவுரை கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பொதுச் செயல்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்குப் பழைய சிக்கல்கள் தீரும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

மீனம்: தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துப் போக வேண்டிய சூழல் ஏற்படும். பெண்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வு குறித்து புதிய நம்பிக்கை பிறக்கும். மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கும்.