ஸ்ரீலங்காவில் சிறுமிகளான அக்காவும் தங்கையும் பரிதாபமாக பலி!

பொலநறுவையில்

குழியில் விழுந்து இரு சிறுமிகள் பரிதாபமான உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எலஹெர பிரதேசத்தில் கைவிடப்பட்ட மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (17-5-20) குறித்த 2 சிறுமிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூன்று மற்றும் ஏழு வயதுடைய இந்த சிறுவர்களும் அக்கா – தங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரையும் மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து குறித்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.