இன்றைய ராசிபலன்: 19.05.2020: சித்திரை மாதம் 6ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன்

இன்று சார்வரி வருடம், வைகாசி மாதம் 6ம் தேதி, ரம்ஜான் 25ம் தேதி, 19.5.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி இரவு 7:11 வரை, அதன்பின் திரயோதசி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 9:25 வரை, அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம் • பொது: துர்கை, முருகன் வழிபாடு.

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது.அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்: உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். உறவினர் விவகாரங்களில் வளைந்து கொடுப்பது நல்லது. பெண்கள் உற்சாகமாக எதையும் செய்ய தொடங்குவர். பிள்ளைகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட ஆரம்பிப்பர்.

ரிஷபம்: பெண்களுக்கு அலங்காரப் பொருட்களின் சேர்க்கையால் அழகும், இளமையும் கூடும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும்.

மிதுனம் : புதிய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. உறவினர்கள் மூலம் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். எதிர்பாராத வரவால் குடும்பத்தேவை பூர்த்தியாகும்.

கடகம்: சுபநிகழ்ச்சிகளுக்காக செலவுகள் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியும், குதுாகலமும் நிறைந்திருக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத விதமாக நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். முன்னர் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.

சிம்மம் : கனவு இல்லம் நனவாகக் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. பெண்களுக்கு மாமனார், மாமியார் முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பார்கள். பணியாளர்களுக்கு மேலிடத்தில் சிறு அதிருப்தி தெரிவிக்கப்படும்.

கன்னி: பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். தொழிலில் புதிய இனங்களில் முதலீடு செய்வீர்கள். காதலில் சில சங்கடங்கள் ஏற்படலாம். வாகனத்தில் மிதவேகம் தேவை.

துலாம்: வியாபாரிகள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வந்த தனவரவு உண்டாகும். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகளை வழங்கி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: வியாபாரிகளுக்கு அரசால் அனுகூலம் உண்டு. நட்பு வட்டாரத்தில் விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. மேலதிகாரியின் உதவியால் பணிகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

தனுசு: வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். பெண்களின் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்பர். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சியை மேலதிகாரி பாராட்டுவார்.

மகரம்: பழைய தவறுகளை நினைத்து வருந்த நேரிடலாம். உத்யோகத்தில் மகிழ்ச்சியும், வெற்றியும் காண்பீர்கள். வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளால் நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில விஷயங்களைச் சீர் செய்து லாபத்தை பெருக்க முயல்வீர்கள்

கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

மீனம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். பணியிடத்தில் அமைதி நிலவும். தள்ளிப் போன பயணம் சம்பந்தமாக நல்லதோர் முடிவு கிட்டும். வியாபாரிகளுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.