இன்றைய ராசிபலன்: 29.06.2020: ஆனி மாதம் 15ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய  பஞ்சாங்கம்

29-06-2020, ஆனி 15, திங்கட்கிழமை, நவமி திதி இரவு 10.13 வரை பின்பு வளர்பிறை தசமி. அஸ்தம் நட்சத்திரம் காலை 07.14 வரை பின்பு சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.39 வரை பின்பு சுவாதி. சித்த யோகம் காலை 07.14 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.39 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சக்கரத்தாழ்வார் ஜெயந்தி. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00

மேஷம்: பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. முன்கோபத்தை தவிர்த்தால் வியாபாரத்தில் லாபத்தை பெறலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சாத்தியம் உள்ளது.

ரிஷபம்: தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வீர்கள். பணியாளர்கள் சிரமத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்தால் கூடுதல் பலன்களை பெறலாம். நண்பர்களின் உதவி கை கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

மிதுனம் : பொருளாதார நிலை உயரும். காதல் வாழ்வில் பெரிதாக மாற்றம் இருக்காது. அலுவலகத்தில் தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். பிள்ளைகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

கடகம்: காதல் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும். பணியாளர்கள் தங்கள் முயற்சியால் நன்மை பெறுவார்கள். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர். சரியான தருணத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

சிம்மம் : உறவினரிடமிருந்து மகிழ்ச்சியூட்டும் தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் சகபணியாளர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரின் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு மனதில் இருந்து வந்த சிறு குறைகள் நீங்கும்.

கன்னி: புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள். கலைஞர்கள் தங்கள் துறைகளில் பல சாதனைகளை செய்வர். பெண்கள் தேவையற்ற கற்பனை பயங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பணியாளர்கள் புத்திசாலித்தனமான செயலால் பாராட்டுப் பெறுவர்.

துலாம்: பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவால் மகிழ்ச்சியும், உற்சாகமும் அதிகரிக்கும். பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம். எதிரிகள் மனம் மாறுவார்கள்.

விருச்சிகம்: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். திடீர் அதிர்ஷ்டங்களும், உதவிகளும் தேடி வரும். பெண்கள் ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கை எட்டுவீர்கள்.

தனுசு: கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்னைகள் வரலாம். அலுவலகத்தில் சகபணியாளர்களிடையே விட்டுக் கொடுத்து போக வேண்டிய சூழல் ஏற்படலாம். பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

மகரம்: வியாபாரத்தில் சில தடைகள் வரலாம். அலுவலகத்தில் போட்டி பொறாமைகள் ஏற்படும். எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் நல்லதே நடக்கும். பெண்கள் புதிய கலைகளைக் கற்றால் நன்மை உண்டு. நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

கும்பம்: அலட்சியப் போக்கின்றி அலுவலக வேலைகளைக் முடிப்பது நல்லது. கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் திடீரென்று சரியாவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு நன்மை உண்டு. புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

மீனம்: சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். பணம் வருவதில் தடைகள் ஏற்படும். பெண்கள் உடல் நலனில் அக்கறை கொள்ளவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து சென்றால் கூடுதல் லாபத்தை பெறலாம்.