திருமணத்திற்கு முன் நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க சென்ற ஜோடிக்கு நேர்ந்த சோகம்!

இலங்கை

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நக்கிள்ஸ் பகுதியில் புகைப்படம் எடுத்த ஜோடி நீர்வீழ்ச்சியில் விழுந்த நிலையில் இளைஞர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குருநாகலை சேர்ந்த குறித்த இந்த ஜோடி அடுத்த மாதம் திருமணம் செய்யவிருந்தனர்.

இந்த நிலையில் புகைப்படம் எடுப்பதற்காக தமது பெற்றோருடன் அவர்கள் அங்கு வந்திருந்தனர்.

இதன்போது இருவரும் தவறி நீரில் விழுந்துள்ளனர். யுவதியை அந்தப்பகுதியில் இருந்தவர்கள் மீட்ட நிலையில் இளைஞர் ஆழமான பகுதியில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன இளைஞனை கண்டுபிடிக்க கடற்படை நீச்சல் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லக்கல பொலிசார் தெரிவித்துள்ளனர்.