பாட்டி வீட்டில் இருந்த சிறுமிக்கு நடந்த சோகம்.!!

வீட்டினுள் இருந்த சிறுமிக்கு நடந்த சோகம்!

மழையினால் வீட்டின் சுவர் இலகிக் காணப்பட்டதன் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள போகலூர் பகுதியை சேர்ந்த பவித்ரா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வந்தது. இந்நிலையில், சிறுமியின் தாத்தா, பாட்டி வீடு மண்சுவரினால் அமைக்கப்பட்ட கூரை வீடாகும்.

குறித்த சம்பவத்தன்று சிறுமி தனது பாட்டியின் வீட்டில் இருந்த நிலையில், மழையினால் பலமிழந்து காணப்பட்ட சுவர் சரிந்துள்ளது. இதில் வீட்டில் இருந்த சிறுமி சுவற்றின் அடியில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தினைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பவித்ரா மற்றும் அவரது தாத்தா, பாட்டியை மீட்ட நிலையில், சிறுமியின் பாட்டி அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பவித்ராவின் தாத்தா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள பிற மண்வீடுகளும் எப்படி உள்ளது என்று சோதனை செய்துகொள்ளுமாறு அப் பகுதி மக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.