யாழில் வீட்டினுள் அனைவரும் உறக்கிக் கொண்டிருந்த வேளை அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

யாழில் அதிகாலையில் நிகழ்ந்த அதிர்ச்சி!!

யாழ் ஏழாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு,அந்த வீட்டில் இருந்த 14 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரும் தகவல்,

நேற்றைய தினம் அதிகாலை வீட்டிலுள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், மர்மமான முறையில் வீட்டிற்குள், புகுந்த திருடர்கள் வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் உறக்கத்தில் இருந்து விழித்துப் பார்த்தபோது, வீடு உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டுக்காரர்களால் உடனடியாக இச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.