வனிதாவின் திருமண விவகாரம்… அதிர்ச்சியடைந்தேன்! பிரபல நடிகை லட்சுமிராம கிருஷ்ணன் எழுப்பும் கேள்வி!

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை லட்சுமி கிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் நேற்றுநெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

அவரது திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

திரைப் பிரபலங்கள் , ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகை வனிதா, தன்னிடம் பணம் பறிப்பதற்காக அவர் இத்தகைய புகார் கூறியுள்ளதாகவும், அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அவர் ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் இப்படி ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன்.

வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.