இன்றைய ராசிபலன்: 30.06.2020: ஆனி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய  பஞ்சாங்கம்

30-06-2020, ஆனி 16, செவ்வாய்க்கிழமை, தசமி திதி இரவு 07.50 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சுவாதி நட்சத்திரம் பின்இரவு 04.04 வரை பின்பு விசாகம். சித்த யோகம் பின்இரவு 04.04 வரை பின்பு மரண யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக- லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்: வியாபாரிகள் இப்போதைக்கு பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பெண்கள் யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டாம். பணியாளர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் எதிர்பார்த்த பதவி உயர்வை பெறலாம்.

ரிஷபம்: மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். சிலரால் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சந்திப்பீர்கள். மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.

மிதுனம்: பணியாளர்கள் திட்டமிட்ட இலக்குகளை அடைய கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். சிறிய ஆசைகளுக்கு இடம் கொடுத்து பிரச்னையில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

கடகம்: குடும்பத்தினரிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பேச்சில் கவனம் தேவை. கணவரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத் துறையினரின் மனதில் வீண் கவலைகள் ஏற்படும்.

சிம்மம் : சொந்த பந்தங்களை அனுசரித்து சென்றால் பல வகைகளில் நன்மை கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் விட்டுக் கொடுத்து போகவேண்டியிருக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.

கன்னி: தொழிலில் இதுவரை இருந்த வந்த சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு உபரி வருமானம் வரும். வியாபாரத்தில் முன்னேற அதிகமாக உழைப்பீர்கள். சகோதர, சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.

துலாம்: பல காலம் சம்பள உயர்வு இல்லாமல் இருந்தவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல செய்தி உண்டு. வீடு, மனை வாங்கும் போது நன்றாக விசாரித்து வாங்குவது நல்லது. குடும்ப விஷயங்களை அக்கம் பக்கத்தினரிடையே பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

விருச்சிகம் : பொதுநலப் பணியில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். வியாபாரிகள் கடன் கொடுக்கும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவாதங்களை தவிர்ப்பதால் மன உளைச்சலை தடுக்கலாம். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.

தனுசு: குடும்பத்தில் எதிர்பார்த்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும். தந்தைவழி உறவினர்கள் தரும் ஆதரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.

மகரம்: பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அலுவலக வேலைகள் காரணமாக அலைச்சல், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம் : வெளிநாட்டில் இருக்கும் மகளின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நீங்கள் மதிக்கும் உயா்ந்தவா்களின் ஆசிகளைப் பெறுவீா்கள். பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி வந்தாலும் அதை சந்தோஷமாகச் செய்து நல்ல பலன்களை பெறுவர்.

மீனம்: எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். பெண்கள் வரவுக்கு மீறிய செலவுகள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் யாரையும் விளையாட்டுக்குக்கூட கேலி செய்து பேசாதீர்கள். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.