இலங்கையில் கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் மற்றுமொரு தொற்றுநோய்!!

இலங்கையில் மற்றுமொரு தொற்றுநோய் அபாயம்!

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியா நோய் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் மாத்திரம் 3 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரையில் 13 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கடந்த வாரம் பதிவாகிய மலேரியா நோயாளிகள் மூவரில் ஒருவர் தம்புளை – பெல்வெஹெர தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து இனங்காணப்பட்டுள்ளனர்.

அடையாளம் கணாப்பட்ட இரத்திபுரி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் மடகஸ்கார் நாட்டில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டவராகும். அவர் தற்போது தம்புளை வைத்தியசாலையில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மலேரியா தடுப்பு பிரிவினர் இயக்குனர் வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய மலேரியா நோயாளிகளில் இருவரும் இந்தியாவின் தம்பதிவ யாத்திரைக்கு சென்று திரும்பியவர்களாகும். அவர்கள் இவ்வாறு நாடு திரும்பி 10 மாதங்களின் பின்னர் மலேரியா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் இரத்தினபுரி – கலவான மற்றும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கையை, ஐக்கிய நாடுகளின் சுகாதார பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.