“என் கணவரை மீட்டெடுக்காமல் விடமாட்டேன்” பீட்டர் பாலின் முதல் மனைவி புட்டுப்புட்டு வைத்த ரகசியங்கள்.!

பீட்டர் பாலின் மனைவி வெளியிட்ட கருத்து!!

கடந்த 27 நடைபெற்ற நடிகை வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றது.இந்த நிலையில் பீட்டர் பாலின் மனைவி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.” என்னை விவாகரத்து செய்யாமலயே வனிதாவை திருமணம் செய்துவிட்டார்” என்று பீட்டர் பாலின் மீது அவருடைய மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் பீட்டர்பாலின் முதல் மனைவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் , ” தனக்கு விவாகரத்து கொடுக்காமல், யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று அவர் உறுதியாக தெரிவித்தார். ஆனால், விவாகரத்து பெறும் முன்பே அவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றது.

வனிதாவுடன் திருமணமா என்று நான் கேட்டதற்கு திருமணம் இல்லை. அது வெறும் ஷூட்டிங் என்று தெரிவித்தார். ஆனால், தற்பொழுது ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்ததும் என்னால் அதிர்ச்சி ஆவதை தடுக்க முடியவில்லை.

எனக்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுக்கு அப்பா வேண்டும். எனக்கு கணவர் வேண்டும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதிலும், அவர் என்னுடைய கணவர். அவரை யாருக்கும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது.

வனிதா எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. என் கணவரை மீட்டு எடுக்காமல் விட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக அவர் அந்த ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.