ஒரு மாதமாக காணாமல் போன கணவன்! விசாரணையின் போது வெளிவந்த மனைவியின் உண்மை!!

காணமல் போன கணவன்!

இந்தியாவில் ஒரு மாதமாக கா ணாமல் போன நபர் ஒருவர் ஆற்றுக்கு அருகில் ச டலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரை கொ லை செய்ததாக அவரது மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கை பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கும் நமீதா என்ற இளம்பெண்ணுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்த திருமணம் ஆகும். இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ம் திகதி முதல் பினோத் கா ணாமல் மா யமாகியுள்ளார்.

இந்த விடயம் குறித்த முறைப்பாட்டிற்கமைய பொலிசார் பினோத்தை தேடி வந்த போது அங்குள்ள மகாநதி ஆற்றுக்கு அருகில் அவரின் ச டலம் து ண்டு து ண்டாக இருந்த நிலையில் சமீபத்தில் மீட்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பினோத் ம ரணத்தை கொ லை வழக்காக மாற்றிய பொலிசார் பலரிடமும் விசாரித்து வந்தனர். அப்போது பினோத் மனைவி நமீதாவின் நடவடிக்கையில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் தங்கள் பாணியில் பொலிசார் கடுமையான விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

விசாரணையின் போது தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொ லை செய்ததாக நமீதா உண்மையை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து நமீதாவை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.