சலூன் கடைக்கு வந்த நபருக்கு இருமல்.. அரங்கேறிய வாய்த்தகராறு.. சோதனையில் கொரோனா உறுதி!!

சலூன் கடை வத்தவருக்கு கொரோனா!

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் கடுமையான அளவு அதிகரித்துள்ளது. அங்கு தினமும் மக்கள் அதிகளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஊரடங்கு ஆறாவது முறையாக ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு பணிகளும் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனவால் 86,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பலியானவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் 444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வீதியில் சலூன் கடை ஒன்று இயங்கி வருகிறது.ககுறித்த சலூன் கடைக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக முடிதிருத்தும் செய்ய இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

குறித்த இளைஞர் இருமல் மற்றும் சளி அறிகுறியுடன் வந்த நிலையில், நீண்ட நேரமாக அமைதிகாத்து, முடித்திருந்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். இந்த சூழலில் கடுமையான இருமல் ஏற்பட்ட நிலையில், பதறிப்போன அழகுநிலைய உரிமையாளர் முடிதிருத்தும் செய்ய இயலாது என்று கூறியுள்ளார். இந்த அந்த இளைஞருக்கும், அழகுநிலைய கடை உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், இதனை வேடிக்கை பார்த்த மக்கள் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்ததில், முடிதிருத்தம் செய்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து கடைக்கும் முடிதிருத்தும் செய்துகொள்ள வந்த மேலும் 6 பேரின் விபரத்தை சேகரித்து தனிமைப்படுத்தியுள்ளனர். 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பரிந்துரைப்படி இருமல் போன்ற அறிகுறி இருந்தாலே சோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ள நிலையில், இளைஞரின் அலட்சியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.