யாழில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு!! மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை!

யாழில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தெரிவித்துள்ளது.

நாளையதினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உரப்பை, சாக்கு, பொலித்தீன் போன்றவற்றின் மீது மரக்கறி மற்றும் பழங்கள் வைத்து விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மேசை, ராக்கை அல்லது உயரமான இடத்தில் வைத்தே மரக்கறிகள் விற்பனை செய்ய வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை ஏற்காத வர்த்தகங்கள், சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.