வேகமாக வீட்னுள் புகுந்த லொறி.. அ திஷ்டவசமாக உ யிர்தப்பிய குடும்பம்.!!

வேகமாக வீட்னுள் புகுந்த லொறி!!

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, இரயில் நிலையத்திற்கு பின்புறம் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுந்தர். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்ற காரணத்தால், குடும்பத்தினர் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிவகாசி வேலாயுதபுரம் சாலையில் அதிவேகத்தில் வந்த லொறி, கட்டுப்பாட்டினை இழந்து சுந்தரின் இல்லத்திற்குள் புகுந்துள்ளது. விபத்திற்கான சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வருகையில், லொறி வீட்டிற்குள் புகுந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கணவன் மற்றும் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுமார் 3 மணிநேர போ ராட்டத்திற்கு பின்னர், இடிபாடுகளில் சிக்கி தவித்த 3 பெண்களை மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லொறி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்த நிலையில், அவர் போ தையில் வாகனத்தை இயக்கி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நல்ல வேலையாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.