நடைபெற இருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பானது!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து 200 குழுக்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய வருகின்ற 6 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படுகின்றது.முதற் கட்டமாக மாணவர்களை உள்ளெடுத்த பின்னர் இந்த ஆய்வு நடவடிக்கை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆய்வு நடவடிக்கைக்காக கல்வி அமைச்சினால் 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், நேரடியாக மாணவர்களிடம் சென்று அவர்களிடம் இது குறித்து கலந்துரையாடி ஆராய்ந்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி பரீட்சை நடைபெறும் என எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்துபாடசாலை கட்டமைப்பில் உள்ள மாணவர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையை நடத்தும் திகதியையும் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.