பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஈழத்து தமிழ் பெண்!!

பிரான்சில் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை பெண்!

பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைபெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் போட்டியிட்டு இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பிரபாகரன் பிறேமி என்பரே வெற்றிபெற்றுள்ளார்.

மேலும் அவர் பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

இதேவேளை இம் முறை பிரான்ஸில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்களில் Ile de France பிராந்தியத்தில் பல இடங்களில் இலங்கையர்களும் மாநகரசபை உறுப்பினர் பதவிகளுக்காக களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டனர் .

இந்த நிலையில் புலம்பெயர் தேசத்தில் எமது இளைய தலைமுறையினர் எம் தேசியத்தின் பாதைக்கு உரமுட்ட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.

அத்துடன் தமிழ் மொழிக்கும் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் உங்கள் சேவை தொடரட்டும் என்றும் அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.