ஆடுமேய்த்த சிறுவனுக்கு செல்போனால் நேர்ந்த துயரம்.!

செல்போனால் நேர்ந்த துயரம்

திருச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் 6 அடி பள்ளத்தில் விழுந்து, 2 மணி நேர போ ராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீ ட்கப்பட்டுள்ளான்.

திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை அருகே இருக்கும் ஜமுனாதபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆதித்யா தன்னுடைய வீட்டில் இருக்கும் ஆடுகளை அருகில் இருக்கும் மலைப்பகுதிக்கு மேய்க்க அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது, சிறுவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செல்போன் கைதவறி அங்கிருந்த பாறையில் விழுந்து இருக்கின்றது.

பள்ளத்தில் விழுந்த செல்போனை எடுக்க ஆதித்யா க டுமையாக மு யன்றுள்ளார். அப்பொழுது, சிறுவனின் கால் தவறி மிகவும் குறுகலான ஆறு அடி பள்ளத்தில் விழுந்து இருக்கின்றான். இதன் காரணமாக பள்ளத்தில் சிறுவனின் உடல் சிக்கிக் கொண்டது. இதனால் பள்ளத்திலிருந்து அவனால் வெளியே வரமுடியவில்லை.

நீண்ட நேரமாகியும் தன்னுடன் விளையாடிய நண்பனை காணாததால், அவனுடைய நண்பர்கள் தேடி அங்கும், இங்கும் அலைந்து இருக்கின்றனர். அப்பொழுது ஆதித்யா பள்ளத்தில் மா ட்டிக் கொண்டதை கண்டு ஊர் மக்களுக்கு ஓடிச்சென்று மற்ற சிறுவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் விரைந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர். இரண்டு மணி நேர போ ராட்டத்திற்கு பிறகு உ யிருடன் ஆதித்யாவை மீட்டனர். பின்னர், தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டான். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.