தப்பியோடிய கைதி.. மேளதாளத்துடன் வீட்டிற்கு வந்து வினோத சம்பவம் செய்த காவல்துறை.!!

இந்தியாவின்

பிகார் மாநிலத்தில் உள்ள மகேஷ்பூர் பகுதியை சார்ந்தவர் சூரஜ் யாதவ். இவரது மகன் சந்தன் யாதவ். இவர் சில குற்றவழக்குக்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், இவரின் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கிறது.

இதனால் சந்தன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்துள்ளான். இதன்பின்னர் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக காவல் துறையினருக்கு புகார் வந்துள்ளது.

இந்த வழக்கின் கீழ் காவல் துறையினர் கைது செய்ய முயற்சிக்கையில், காவல் துறையினரின் பிடியில் இருந்து சந்தன் தப்பி சென்றுள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் அவனை கைது செய்யும் பொருட்டு வித்தியாசமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

இதன்படி, சந்தன் வீட்டிற்கு நேரில் பேண்ட் செட் வாத்தியத்துடன் விரைந்த காவல் அதிகாரிகள், வீட்டின் வாயிலில் தேடப்படும் குற்றவாளி இந்த வீட்டை சார்ந்தவர் என்றும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் நேரடியாக வந்து காவல் நிலையத்தில் சரணடையுமாறும் போஸ்டர் தயார் செய்யப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.