ராகு கேது பெயர்ச்சி 2020.. இந்த ஆண்டு எப்போது நடைபெறுகிறது? எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்.!!

ராகு கேது பெயர்ச்சி 2020

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோள்களும் நம்மை இயக்கி கொண்டே இருக்கின்றன. அவற்றில் நம்மை இயக்கும் தன்மை கொண்ட கோள்கள் என நம் முன்னோர்கள் ஒன்பது கோள்களை வரையறுத்துள்ளனர். அவற்றுள் ஒன்றுதான் நவகிரகங்களில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது. தற்போது நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி, மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கின்றன.

இன்றைய பொழுதில் மிதுன ராசியில் ராகுவும், தனுசு ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி :

ராகுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

கேதுபகவான் சார்வரி வருடம் ஆவணி மாதம் 16ஆம் தேதியான 01.09.2020 செவ்வாய்க்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி :

ராகுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மிருகசீரிஷம் மூன்றாம் பாதமான மிதுன ராசியில் இருந்து மிருகசீரிஷம் இரண்டாம் பாதமான ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

கேதுபகவான் சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 7ஆம் தேதியான 23.09.2020 புதன்கிழமை அன்று மூலம் முதல் பாதமான தனுசு ராசியில் இருந்து கேட்டை நான்காம் பாதமான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் :

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத சமயத்தில் திடீரென யோகத்தை உருவாக்கும் வல்லமை கொண்ட யோகாதிபதியான ராகுவும்.

மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நம்மை மோட்சத்தின் பாதைக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட மோட்சாதிபதியான கேதுவும்.

நவகிரகங்களில் மற்ற கிரகங்களை விட அதிக பலம் வாய்ந்தவர்கள்.