தனிமைப்படுத்தலை முடித்து வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

இந்தியா

குடும்பம் ஒன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிற்கு வந்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் வசித்து வருகின்ற மல்லிகா(65), என்பவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து அவர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும், ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால், அவர்களுடைய வீடு பூட்டியே இருந்துள்ளது. இந்நிலையில், 14 நாட்களுக்கு பின்னர் அவர்கள் தனிமைபடுத்தலை நிறைவு செய்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களின் வீட்டின் பின்பக்க கதவானது உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தால் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.28 லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட நகை-பணம் ஆகியவை சுமார் ரூ.25 லட்சம் மதிப்புமிக்கது என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஆம்பூர் தாலுகா காவல்நிலையத்தில் குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். இதனை அடுத்து , காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொ ள்ளையர்களை தேடி வருகின்றனர்.