தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 37 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கம்விலை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இன்று சென்னையில் 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,691 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.37,528 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கம்விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,926 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ.39,408 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமின்றி ரூ.56.50 ஆகவும், 1 கிலோவிற்கு ரூ.56,500 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களை பொறுத்த வரையில் கடுமையான அளவு உயர்ந்து இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்றைய நிலவரப்படி இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.