இன்றைய ராசிபலன்: 15.07.2020: ஆனி மாதம் 31ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 15,2020

இன்று சார்வரி வருடம், ஆனி மாதம் 31ம் தேதி, துல்ஹாதா 23ம் தேதி, 15.7.2020 புதன்கிழமை, தேய்பிறை, தசமி திதி இரவு 10:03 வரை, அதன்பின் ஏகாதசி திதி, பரணி நட்சத்திரம் மாலை 5:02 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த – அமிர்த யோகம்.

நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை. எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. சூலம் : வடக்கு

* பரிகாரம் : பால் * சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி * பொது : விஷ்ணு வழிபாடு.

மேஷம்: மனதில் தெளிவு பிறக்கும். பெண்களுக்கு அலைச்சல் குறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் முனைப்புடன் உழைக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் தாமதமாக நடந்த செயல்கள் விரைவாக நடக்கத் தொடங்கும்.

ரிஷபம்: அலுவலக நண்பர்களிடம் அதீத நம்பிக்கை வைக்க வேண்டாம். எதிலும் கவனமுடன் செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. தெய்வ வழிபாடு மன அமைதி தரும்.

மிதுனம் : சகோதர வகையில் சிறு சங்கடங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் உள்ள பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பெண்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். மனதில் இருந்த சோர்வு நீங்கும்.

கடகம்: வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை கேட்டு நடப்பார்கள். பெண்களுக்கு மனதை அழுத்திக் கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட விவகாரத்தில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

சிம்மம் : உறவினருடன் விட்டுக் கொடுத்து சென்று பிரச்னைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். திட்டமிட்ட முயற்சியில் வெற்றி கைக்கு அருகில் இருந்தும் சில தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி: பெண்களுக்கு வீண் செலவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படலாம். பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

துலாம் : தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. மனதில் இனம்புரியாத பயம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல் நலனில் அக்கறை கொள்ளவும்.

விருச்சிகம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சிக்கனமாக செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சமாளிக்கும்படி இருக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசினால் லாபம் கூடும்.

தனுசு: வியாபாரத்தில் மறைமுக போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னையை நினைத்து கவலைப்பட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

மகரம் : உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மகனுக்கு எதிர்பார்த்த வரன் அமைவதால் மனதில் உற்சாகம் கூடும். அலுவலகத்தில் நிதானத்தை கடைபிடித்தால் பிரச்னையிலிருந்து தப்பலாம். நல்லவரின் ஆசி கிடைக்கும்.

கும்பம்: பண விஷயங்களில் கவனமாக இருந்தால் உங்களின் சொல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். அலுவலகத்தில் வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். பெண்கள் ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர்.

மீனம்: அலுவலகத்தில் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வங்கியில் விண்ணப்பத்திருந்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.