வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம்! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!!

வரலாறு காணாத விலையேற்றத்தில் தங்கம்

இலங்கையில் வரலாறு காணாத வகையில் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளமைக்கான காரணத்தை தேசிய மாணிக்கம் மற்றும் நகை அதிரகார சபை வெளியிட்டுள்ளது.

சந்தையில் தங்கத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணமாகும் என அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமகாலத்தில் இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் வரையிலும், 22 கரட் தங்கத்தின் விலை 91700 ரூபாய் வரையிலும் 21 கரட் தங்கத்தின் விலை 87500 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.

தங்கத்திற்கு ஏற்பட்ட கேள்வியை ஈடு செய்யும் வகையில் கிடைப்பதற்கான வழிமூலங்கள் இல்லாமல் போயுள்ளன.

வங்கி நடவடிக்கையின் போது தங்கம் ஏலமிடும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படும். தற்போது அந்த நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு தங்கம் வரும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ளதால் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.