கணவர் செய்த காரியத்தால் ஆத்திரமடைந்த பெண்… நடுரோட்டில் நடந்த சம்பவம்!

இந்தியா

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற மும்பை பெடர் வீதியில் கடந்த சனிக்கிழமை பெண்ணொருவர், தனது கனவர் மற்றொரு பெண்ணுடன் காரில் செல்வதை கண்டு நடுரோட்டில் மறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருப்பதை கண்டு காரை வழிமறித்த பெண்மணி வீதியில் வைத்து காரைவிட்டு சட்டையை பிடித்து வெளியே இழுத்துள்ளார்.

குறித்த பெண்ணையும், கணவரையும் காரை விட்டு இறங்க கூறிய நிலையில், காரில் இருந்து இருவரும் இறங்காமல் இருந்துள்ளனர். மேலும், கோபம் அடைந்த பெண் செருப்பை கழட்டி காரின் முன்புற கண்ணாடியில் அடித்தார்.

இந்த சம்பவத்தின் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியதற்காக பெண்ணிற்கு அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் பெண்ணின் கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால், இதனை பொறுக்க இயலாத பெண்மணி இப்படி நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.