கொரோனாவை விரைவில் குணப்படுத்தும் இயற்கை மருத்துவம்! 61 ஆயிரம் பேர் பூரண நலன்!

கொரொனாவிற்கு பலனளிக்கும் இயற்கை மருத்துவம்!

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையும், தமிழ் மருத்துவ இயற்கை சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கமைய தமிழ் மருத்துவ முறைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு நோய் விரைவில் குணமாகிறது.

இந்த விடயம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழக முதல்வரின் தலைமையில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்த மற்றும் யோகா சிகிச்சைகளும் வழங்கப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட நபர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் மூச்சுப்பயிற்சி போன்றவை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் நுரையீரல் செயல்திறன் அதிகரிக்க யோகா நல்ல வழிவகை செய்தது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய முறைகளிலான சில ஆசனங்களும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் அனைத்து இடங்களிலும் யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டது. இதனைத்தவிர்த்து, மூலிகை பானங்கள் மற்றும் நவதானிய வகைகள், சிறு தானியங்கள் போன்ற ஆரோக்கிய உணவுகள், நீராவி பிடித்தல், சுவாசத்திற்கான நறுமண சிகிச்சை போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. 200 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதற்கமைய தமிழகத்தில் இயற்கை மருத்துவத்தால் தற்போது வரை 61 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் தேவையின் அடிப்படையில் சிகிச்சைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்.

அத்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலன்காக்கும் இந்த நடவடிக்கை கொரோனா ஒழிப்பு நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.