இன்றைய ராசிபலன்: 16.07.2020: ஆடி மாதம் 1ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

ஜூலை 16,2020

இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 1ம் தேதி, துல்ஹாதா 24ம் தேதி, 16.7.2020 வியாழக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 11:18 வரை, அதன்பின் துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் இரவு 7:00 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம், மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. சூலம் : தெற்கு

* பரிகாரம் : தைலம் * சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம் * பொது ஆடி மாதப்பிறப்பு, ஏகாதசி, கார்த்திகை விரதம்.

மேஷம்: எடுத்த செயலை செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்களுடைய நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதற்கான சூழல் உருவாகும். உத்யோகஸ்தர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து லாபத்தை ஈட்டுவீர்கள்.

மிதுனம் : குடும்ப வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் இருந்து ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுவது நல்லது. பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள்.

கடகம்: உங்களின் மனஉளைச்சலை நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்காது. உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சல் சற்று அதிகரிக்கும். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

சிம்மம் : வியாபாரத்தில் உள்ள பாக்கிகளை வசூல் செய்வீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் தங்களின் குடும்ப விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். கடந்த நாட்களில் இருந்த பிரச்னை தீரும்.

கன்னி: நீண்ட நாள் கவலைகள் தீர ஆரம்பிக்கும். வியாபாரத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய வருமானத்தால் உங்களின் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளால் செலவுகள் கூடும்.

துலாம்: தன்னம்பிக்கையுடன் பொது நல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். பெண்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அலுவல பணிகளில் அலட்சியப் போக்கு வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தில் திடீர் பிரச்னைகள் ஏற்படலாம். பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். கணவன், மனைவி இடையே வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை.

தனுசு: உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான சூழல் உருவாகும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை தேவை. பூர்வ சொத்துக்கள் மூலம் எதிர்பார்த்த பலன் உண்டு. பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர்.

மகரம்: மனதில் தைரியம் கூடும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். சுபநிகழ்ச்சி தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போது கவனம் தேவை.

கும்பம்: வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள். உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

மீனம்: கருத்து வேறுபாடுகளால் விலகிய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் உள்ள கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்பு கூடும். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர்.