இலங்கையில் இன்றில் இருந்து சுகாதார சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!

பிரதி பொலிஸ் மா அதிபரின் தகவல்!

நாட்டில் இன்றை தினத்தில் இருந்து சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பொது மக்கள் முன்பை போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றாத நபர்களுக்கு எதிராக இன்று முதல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுளளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா பரவல் குறித்து பல்வெறு போலி பிரச்சாரங்கள் இடம் பெற்று வருகின்றது.இவ்வாறு போலி தகவல்களை பரப்புபவர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறு உண்மையற்ற போலி பிரச்சாரம் செய்யும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.