சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் தற்போது உள்ள நிலைமைக்கமைய ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நாடு பூராகவும் வைரஸ் தாக்கம் இருந்தால்த்தான் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தலல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். எனினும் இலங்கையில் அதற்கான தேவை தற்போது ஏற்படவில்லை.எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்.