வளர்ப்பு மகனை திருமணம் செய்த பெண்..இணையத்தில் வைரலாகும் காதல் கதை!!

வளர்ப்பு மகனை திருமணம் செய்த பெண்!

ரஷ்யா நாட்டில் பெண் ஒருவர் தான் வளர்த்த மகனையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா பல்மஷோவா. இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதத்தின் போது 7 வயது சிறுவனின் புகைப்படம் மற்றும் அந்த சிறுவனுக்கு 20 வயதாகும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

இவரின் இந்த பதிவிற்கு பலரும் விமர்சனம் செய்து வந்தனர். ஏனெனில் 20 வயது வாலிபனான அந்த சிறுவனை, பெண்மணி காதலர் போல கட்டியணைத்து பதிவு செய்திருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் அந்த வாலிபரை திருமணமும் செய்துள்ளார். இதன்பின்னர் அந்த சிறுவன் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனக்கு தற்போது 35 வயது ஆகிறது. கடந்த 2007 ஆம் வருடத்தில் எனக்கு 22 வயதான நிலையில், அலெக்சி என்ற நபரை திருமணம் செய்துகொண்டேன். அலெக்சிக்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தனர்.. இதில் 2 ஆவது மகன் விளாடிமிர் ஷவரின். விளாடிமிர் ஷவரினிற்கு அப்போது 7 வயது இருக்கும். 10 வருடத்திற்கு பின்னர் அலக்ஷியிடம் இருந்து நான் விவாகரத்து பெற்றேன்.

இதனையடுத்து நான் மற்றும் ஷவரின் சகோதரர்கள் மூன்று பேர் வசித்து வந்த நிலையில், விளாடிமிர் ஷவ்ரினிற்கு மரினாவின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இது இருவருக்கும் புரிந்து, இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மெரினா மற்றும் விளாடிமிர் இணைந்து, இப்போது மரினா கர்ப்பிணியாக இருக்கிறார். மேலும், குழந்தை பிறப்பிற்கு முன்னதாக திருமணம் செய்ய முடிவு செய்து, இருவரும் அங்குள்ள பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.