ஜூலை 17,2020
இன்று சார்வரி வருடம், ஆடி மாதம் 2ம் தேதி, துல்ஹாதா 25ம் தேதி, 17.7.2020 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி நள்ளிரவு 12:08 வரை, அதன்பின் திரயோதசி திதி, ரோகிணி நட்சத்திரம் இரவு 8:34 வரை, அதன்பின் மிருகசீரிடம் நட்சத்திரம், மரண – சித்தயோகம்.
நல்ல நேரம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. சூலம் : மேற்கு
* பரிகாரம் : வெல்லம் * சந்திராஷ்டமம் : விசாகம், அனுஷம் * பொது: மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்
மேஷம்: சொத்து வாங்குவது பற்றிய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கலைத் துறையினரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: அலுவலக நண்பர்கள் உங்களின் மீது பொறாமை கொள்ளும்படியான சாதனைகளை பல செய்வீர்கள். பெண்களின் நீண்ட நாளைய கவலை தீரும். வசீகர பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் மூலம் இழந்த நம்பிக்கையை பெறுவீர்கள்.
மிதுனம் : வெளிவட்டாரத்தில் புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலக ரீதியான பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு குறையும்.
கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் நிலுவைப் பணிகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
சிம்மம் : அத்தியாவசிய செலவுகளை பற்றிக் கவலை கொள்வீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் புதிய நபர்களிடம் பேசும்போது கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவர்.
கன்னி: கடந்த சில நாட்களாக மனதை அரித்து வந்த கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு நன்மை ஏற்படும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
துலாம்: எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். ரகசியங்களை வெளியிட்டு சிக்கலில் மாட்ட வேண்டாம். உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
விருச்சிகம் : வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தில் பலன் கிடைக்க தாமதம் ஆகலாம். பெண்களுக்கு தெய்வ வழிபாடு ஒன்றுதான் நிம்மதியைத் தரும். தேவையற்ற பயங்களால் கவலை கொள்வீர்கள். பணியாளர்கள் சோம்பலை ஒழிக்க வேண்டும்.
தனுசு: கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி வருத்தப்படுவீர்கள். பணச் சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வாகன யோகம் கைக்கூடும். பெண்கள் கணவரின் குடும்பத்தினரிடம் பாராட்டைப் பெறுவர். புதிய தொழில் தொடங்க நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.
மகரம் : பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகேற்ப நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை செய்வீர்கள்.
கும்பம் : கலைஞர்களுக்கு புதிய திட்டங்கள் வெற்றியை தேடிதரும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் வசூலாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பெண்கள் கணவரின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பர். நட்பு வட்டம் விரிவடையும்.
மீனம்: அலுவலகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. பெண்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். விசா தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.