தமிழகம்
இந்தியாவில் த மிழகத்தில் கொ லை செ ய்யப்பட்ட இரா ணுவ வீரரின் மனைவி, தாயார் உ டல் அ ழுகியதால் உறவினர்கள் அ திருப்தி அடைந்ததோடு இது தொடர்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
சிவகங்கையின் காளையார்கோவில் அருகே முடுக்கூரணியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஸ்டீபனின் மனைவி சினேகா, தாயார் ராஜகுமாரி ஆகிய இருவரையும் ஜூலை 14-ம் திகதி கொ லை செ ய்துவிட்டு 75 பவுன் நகைகளை சிலர் கொ ள்ளையடித்துச் செ ன்றுள்ளனர்.
இந்நிலையில் லடாக்கில் பணிபுரியும் இராணுவ வீரர் ஸ்டீபனுக்கு இது குறித்து தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர், இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டீபன் நேற்று ஊருக்கு வந்ததையடுத்து மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவரது உடல்களை எடுத்தபோது அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இதை பார்த்து ஸ்டீபன் மற்றும் உறவினர்கள் அ திர்ச்சியும், அ திருப்தியும் அ டைந்தனர். தொடர்ந்து உடல்களைச் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றனர். அங்கு கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது ஸ்டீபனின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் குளிர்சாதன இயந்திரம் முறையாக இயங்காததால் உ டல்கள் அ ழுகிவிட்டன. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் நாங்களே குளிர்சாதன இயந்திரத்திற்கு ஏற்பாடு செய்திருப்போம். இராணுவ வீரரின் குடும்பத்திற்கே இந்தநிலையா?,’ என்று மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றி தெரிவித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் இது பற்றி தெரிவிக்கையில், உ டல்கள் அ ழுகியது குறித்து விசாரிக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து சினேகா, ராஜகுமாரி உடல்கள் உறவினர்களால் அ டக்கம் செ ய்யப்பட்டது. மேலும் உ யிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தலா 2 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த கொ லை வ ழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இராணுவ வீரரின் மனைவி, தா யார் கொ லை வ ழக்கை விசாரித்து வரும் காளையார்கோவில் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கு விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.